எம் தாய் மொழியாம் தமிழ் மொழியானது பிறந்து நடைபயின்று வளர்ந்த
காலங்களில் இருந்து பார்க்கும் போது எம் தமிழர்களுக்கென்று பெறுமை
பாராட்டுகின்ற ஒரு சிறந்த பண்பாக விளங்குவது விருந்தோம்பல் என்ற
பண்பே என்று கூறும்போது அது தமிழர்களின் சிறப்பினை எடுத்து
கட்டுகின்றது.இப்பண்பை மேற்க்கொள்ளும் போது எம் தமிழர்கள்
சந்தோசம் அடைகின்றனர். இதன் சிறப்பை கருதியதனாலோ என்னவோ
உலகப் புகல்படைத்த வள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தைப்
படைத்துள்ளார்.ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை தமிழரிகள் இதனை
மேற்க்கொன்டு வருகின்றனர்.எனினும் இதன் தன்மை சற்று குறைந்து
கணப்படுகிறது.