தமிழ் கலாசாரம்
கலாசாரம் என்பது ஒரு சமுகத்தின் அடையாளமாகும்.அதனை பாதுகாற்பது எமது கடமையாகும்
பண்பாடு
பண்பாடுகள்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!
இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....
துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?
நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.
இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்
பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!
ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!
காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!
வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!
அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!
நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!
பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!
கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!
மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!
அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,
வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......
உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....
கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!
நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது
கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!
நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?
கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!
யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!
பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.
வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!
பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.
அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்!
தமிழர் பண்பாடு தமிழ் மொழியின்
Add caption
ஊடாகவும்
,
தமிழர் தாய
கப் பிணைப்பின
ஊடாகவும்
,
தமிழர் மரபுகள்
,
வரலாறு
,
விழுமியங்கள்
,
கலைகள் ஊடாகவும்
,
சமூக
,
பொருளாதார
,
அரசியல் தளங்கள் ஊடாகவும்
பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக்
கூறுகளைக்
குறிக்கும்.தமிழர் பண்பாடு பல
காலமாகப்
பேணப்பட்டு
,
திருத்தப்பட்டு
,
மேம்படுத்தப்பட்ட
கூறுகளைக் குறித்து
நின்றாலும்
,
அது
தொடர்
மாற்றத்துக்கு
உட்பட்டு நிற்கும்
ஒர்
இயங்கியல் பண்பாடே.
Home
Subscribe to:
Posts (Atom)