இன்று நாம் 21ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றபோது எம் மக்களின் அன்றாட வாழ்வில் கலைகள் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றமையைப் பல்வெறு கட்டங்களிலும் அறிய முடிகின்றது. இவற்றுள் தமிழ் மக்களின் வாழ்வில் எம் " ஆயகலைகள் 64" பல்வேறு கட்டங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன.இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் எனப் பல்வேறு கலைகள் ஆதி காலத்திலேயே தமிழ் மக்களுடன் கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் இழையோடி வாழ்வாங்கு வாழ்ந்து வந்தது.., வருகின்றது சங்ககாலத்தில் செந்தமிழ் பேசும் மக்கள் செய்யுட்களையும், பாடல்களையும் இய்ற்றி இசைக்கு முக்கியமளித்தன்ர்.அத்துடன் கூத்து வடிவிலே நாட்டியம் ஆடப்பட்டுவந்தது.
பல்லவர் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் மக்கள் தூய்மையாக பயன்படுத்தி வந்தமையை காணலாம்.மலைகளை குடைந்து கோவிலமைத்ததுடன். பல சிர்ப வேலைப்படுகள் நிறைந்த மாபெரும் கோவில்களையும் அமைத்துச் சிற்ப்க கலைக்கு முக்கியமளித்தனர்.இறைவனுக்கு இறைகாணிக்கையாக நாடனமும் இசையும் செலுத்தப்பட்டன. சோழர் காலத்தில் இவை அனைத்தும் உச்ச நிலை அடைந்து கானப்பட்டது.இவ் இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் ஆகியவற்றிற்குச் சான்றாக பல்லவர் காலத்துக் கோயில்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பவற்றைக் கூறலாம்.
பொதுவாக கலைகளின் முககியத்துவத்தையும் தமிழ் மக்களின் வாழ்வில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவதை காணலாம்.இன்றும் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமன்றி இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் பல கிராமங்களில் நடனமும் இசையும் அன்றையகால நிலையினின்றும் மாறாது பேணப்பட்டு வருகின்றது.உதாரணமாக காவடி, கரகம், கும்மி, கோலாட்டம், என்பனவும் தொழில் பாட்டுக்களான அருவி வெட்டும் பாடல், மீனவர் பாடல்களை நன்கு அவதானிக்கலாம்.இதன் மூலம் இசையும் நடனமும் வளர்ந்து வருகின்றது.
எனினும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப கலைகள் மேலைத்தேய இசை, நடனங்களிற்கேற்ப மாறி வருகின்ற வேலையிலும் இன்றும் பரத நாட்டியம், இசை கச்சேரிகள், நாட்டிய நாடகங்கள் என்பன தமிழ் மக்களிடையே இழையோடி அதற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கின்றமையையும் அறியக் கூடியதாக உள்ளது.
கட்டடக்கலை
தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிமுநூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இசைக்கச்சேரி
பரதம்
கோயில்கள்


