வரலாற்று பரப்பினை எடுத்து நோக்குவோமானால் தமிழர்களின் கலாசாரத்திற்க்கென்றே ஒரு தனியிடம் உண்டு.அதிலும் சிறப்பாக தமிழர்களின் திருமண முறைகளும் அத்ன் சடங்கு சம்பிரதாயங்களும் எம் தமிழரின் கலாசாரத்திற்கு அணிகலன் போன்று காணப்படுகிறது.இதனை இரண்டு முறையாக நோக்கலாம்
01. இந்துகளின் திருமண முறை
ஆனால் இரண்டு முறைகளுக்கும் பொது அடிப்படையிலான பொது சடங்குகள் காணப்படுகிறது.
01. இந்துகளின் திருமண முறை
அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், காப்புகயிறு கட்டுதல், மாங்கல்யம் கட்டுதல்.
02. கிறிஸ்தவர்களின் திருமண முறை
சம்மதம் கூறல், மூன்று கூறல் கூறுதல், சாட்சி கையொப்பம் இடல், மாங்கல்யம் கட்டுதல்,பைபிள் கொடுத்தல், கைகளை சேர்த்துப்பிடித்தல்,
மாலை மாற்றுதல்.
இத்திருமண முறைகளில் கணவன் இறந்தால் மனைவி அதனை தாங்க முடியாமல் உடன் கட்டை ஏறுவாள், தற்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைகள் மாறி வருகின்றது.ஆரம்பத்தில் விவாகரத்து என்ற சொல்லின் பொருளே தெரியாமல் இருந்த காலம் சென்று இன்று இதன் பொருள் தெரியாத சிறுவர்களே இல்லை என்றே கூறலாம்.அந்தளவிற்கு எம் கலாசாரத்தை தாக்கும் கொடிய விஷயங்கள் புகுந்து கொண்டு இருப்பது கவலைக்குரிய விடயமே.சில இடங்களில் மேலைத்தேய நடமுறைகளை தழுவி இடம்பெறுகின்றன.ஆயினும் இலங்கை, இந்தியா, மலேசியா, லணடன் போன்ற தமிழர் வாழும் நடுகளில் திருமண நடமுறைகள் ஆரம்ப காலம் தொட்டு இன்ரு வரை சிறப்பாக நடைபெறுகின்றது என்பது பெருமைக்குறிய விடயமாகும்.




