விழாக்களும், சடங்குகளும்

தமிழர்களின் வரலாற்று பாரம்பரியங்களிலே விழாக்களும்,சடங்குகளும் பெருமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. தமிழர்களின்  விழாக்களுக்கும் தனி சிறப்பு உண்டு.

ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான சடங்குகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சடங்குகள் சமய சார்புடையதாகவே உள்ளது. இருப்பினும் ஒரு சில நிகழ்வுகள் இனங்களை பொறுத்தும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக உணர்ச்சி வெளிப்படுத்தப்படும் முறை, பாடப்படும் பாடல்கள், கொண்டாட்ட முறைகள் ஆகியன. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் தமிழர் மத்தியில் பொதுவாகவும், சமயம் சார்ந்தும் காணப்படும் சில சடங்குகளை தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் எனலாம்.


தமிழர்களின் விழாக்களுள் தைப்பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு,தைப்பூசம், தீபாவளி போன்றன முக்கிய விழாக்காளாகும்.
பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.


தைப்பொங்கல்

மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது



தமிழ் புத்தாண்டுப் பிறப்பு

சித்திரை மாதம் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து.இதில் முக்கிய அம்ச‌மாக‌ கோயில் சென்று ம‌ருத்துநீர் வைத்து முழுகுத‌ல், கைவிஷேட‌ம் கொடுத்த‌ல் என்ப‌ன‌வாகும். ‌



திருவிழா